துபாயில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று மாலையே கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. இதற்காக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான தனி விமானம் நேற்றே துபாய் சென்றுவிட்டது.

ஆனால் துபாய் அரசின் ஒருசில வழக்கமான நடவடிக்கை காரணமாக நேற்று ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்படவில்லை என்று கூறப்படுகிறது

துபாய் அரசின் தடயவியல் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகதாகவும் இதன் காரணமாக ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் உடல் இந்தியா செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக ஐக்கிய அரபு ‌அமீரகத்திற்‌கான இந்தியத் தூதர் வ்தீப் சூரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.