தல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

08:30 காலை

தல அஜித், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் ஒன்று பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் முடிந்ததும் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி தொடர்ந்து நடத்தி மூன்றே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கவும் இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார். எனவே படப்பிடிப்பு தாமதம் ஆனாலும், திட்டமிட்டபடி வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாவது உறுதி என்று கூறப்படுகிறது

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393