1. நடிகர் கருணாகரன் சர்க்கார் என்ன தமிழ் வார்த்தையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சமீபத்தில் சர்க்கார் இசை வெளியீட்டின் போது பேசிய விஜயை, கருணாகரன் மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரை கெட்ட வார்த்தைகளால் வசை பாடி வந்தனர். ஒரு படி மேலே போய் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எல்லாம் ஒட்டினர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு பதிலளித்துள்ள கருணாகரன், ரசிகர்களின் தரத்தை வைத்தே, நடிகரின் தரம் தரம் தெரிகிறது என காட்டமாக பேசியிருக்கிறார். மேலும் என்னை நீ தமிழனா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். உங்களிடம் சர்க்கர் தமிழ் டைட்டிலா என எப்போதாவது கேட்டேனா என கோபத்துடன் கேட்டிருக்கிறார்.

என்னை திட்டுபவர்கள் விஜய் டிவிட்டர் ஐடியை உங்களின் ஐடி-யோடு டாக் செய்யுங்க பார்க்கலாம் என  அவர்  சவால் விட்டுள்ளார்