ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தி அயர்ன் லேடி என்ற பெயரில் தயாராகிக்கொண்டு வருகிறது. இப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவின் குடும்பம், பள்ளிப்பருவம், சினிமா, அரசியல் என அவரது மொத்த வாழ்க்கையும் இடம்பெறுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தபாடல்

ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார். இவர் ஒரு சிறந்த நடிகை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்த சசிகலாவின் கேரக்டரில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இருவருமே சிறந்த நடிகைகள். சசிகலா கேரக்டரில் நடிக்கவிருப்பது யார் என்று இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க பாஸ்-  மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..?