சிவகார்த்திகேயன் படத்தை இயக்க போட்டிபோடும் 2 இயக்குனர்கள்

அஜித், விஜய்யை அடுத்து சிறந்த ஓப்பனிங் வசூல் தரும் படத்தை கொடுப்பவர் சிவகார்த்திகேயன் தான் என்று கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. எனவே அவரை வைத்து படங்கள் இயக்கவும், அவருடைய படத்தின் ரிலீஸ் உரிமையை பெறவும் கடும் போட்டி உள்ளது.

இந்த நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்க விக்னேஷ் சிவன் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் பரிசீலனையில் உள்ளார்களாம். இருவரில் யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதில் கடும்போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.