aishwarya dutta
aishwarya dutta

பிக்பாஸ் 2 சீசன் இன்றுடன் நிறைவுக்கு வந்துவிட்டது.இதில் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் பெங்காலியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் ஒரு கட்டத்தில் அவரை ரசிக்கத்தான் செய்தார்கள் தமிழக மக்கள். அதனால்தான் இறுதி சுற்றுவரை வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் விரும்பிய நபருடன் பேசலாம் என்ற டாஸ்க் வந்தபோது ஐஸ்வர்யாவுடன் பேசிய நபர்தான் கோபி. யார் இந்த கோபி என்ற கேள்வி அப்போதே அனைவருக்கும் எழுந்தது. அதற்கான விடை தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் இது கொஞ்சம் அதிர்ச்சி ரகம்தான்.

aishwarya dutta
aiswarya duta

நிதி நிறுவனம் நடத்தி குறைத்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி பல கோடி பணத்தை பொது மக்களிடம் வசூலித்து ஏமாற்று வேலை செய்து சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்திருக்கும் நபர்தான் இந்த கோபி. அதாவது பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை ஸ்வாகா செய்துள்ளார் கோபி. அந்த கம்பெனியில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னராக இருந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்போது பொருளாதார குற்ற பிரிவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.