அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டாலும், இந்த படம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.

இந்த படத்தின் அப்டேட் ஏன் வரவில்லை என்பது குறித்து விசாரித்தபோது, ‘விசுவாசம்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் உண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்த படம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியில் கசிந்துவிட கூடாது என்பது அஜித்தின் ஸ்டிரிக்டான ஆர்டர் என்றும் கூறப்படுகிறது

ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்து பில்டப் கொடுத்ததால் தான் ‘விவேகம்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.