காலா கரிகாலன் பேரனாக தனுஷ் மகன் ஏன் நடிக்கவில்லை?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா கரிகாலன்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 3வது நாளாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினியின் பேரன் கேரக்டர் ஒன்று உள்ளதாம். ஐந்து வயது சிறுவன் கேரக்டருக்கு பல குழந்தை நட்சத்திரங்களை பரிசீலனை செய்த இயக்குனர் ரஞ்சித் கடைசியாக பிரபல டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தா அவர்களின் மகன் மான்யூவை தேர்வு செய்துள்ளாராம்

ரஜினியுடன் நடிக்க விரைவில் தனது மகனை காதல் கந்தா மும்பைக்கு அழைத்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷின் மகனை இந்த கேரக்டரில் நடிக்க வைக்க ரஞ்சித் விரும்பியதாகவும், ஆனால் ரஜினி உள்பட அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.