அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்க்கு ஆவேசமடைந்த அவர், கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும். வேண்டுமென்றால் அவர் என்னிடம் கூட்டணி வைக்க வரட்டும்’ என்று கூறினார்

தான் 22 வருடங்களாக அரசியல் கட்சி நடத்தி வருவதாகவும், மற்றவர்களை போல் தான் ரிட்டையர் ஆனவுடன் அரசியலுக்கு வரவில்லை என்றும் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவுடன் அரசியலுக்கு வந்ததாகவும் சரத்குமார் கூறினார்

மேலும் தற்போதைய தமிழக அரசு நல்லமுறையில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒரு கட்சியின் தலைவர் மறைந்த பின்னரும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்