கோலிவுட் திரையுலகினர் அரசியலுக்கு வருவதுதான் தற்போதைய ஹாட் டாக். கமல், ரஜினி, டி.ராஜேந்தரை தொடர்ந்து விஜய், விஷால் உள்பட இன்னும் பலர் அரசியல் பாதையை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சினிமாவில் சூடான அரசியல் கேரக்டர்களில் நடித்தவரும், பல அரசியல் மேடைகளில் பேசியவருமான நடிகர் சத்யராஜ் தான் அரசியலுக்கு ஏன் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு ஓட்டு அரசியல் என்பதில் விருப்பமில்லை. என்னால் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது. மக்களுக்கு கூட என்னால் அடிமையாக இருக்க முடியாது. மனதில் என்ன தோணுகிறதோ அதை பேசுகிறேன், அதையே ரசிக்கின்றேன். என்னுடைய கேரக்டரே இதுதான் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சத்யராஜ் நடித்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.