கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்களின் தூக்கத்தை கெடுத்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவருடைய லீக்ஸில் அடுத்து சிக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நேற்று பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளர் கோனா வெங்கட் சிக்கியுள்ளார்.
இயக்குனர் கோனா வெங்கட் ஒரு பிரபல இயக்குனரிடம் அறிமுகம் செய்ய தன்னை அவருடைய கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் தான் கெஸ்ட் ஹவுசுக்கு சென்றபோது எந்த இயக்குனரும் அங்கு இல்லை என்றும், அங்கு அவர் தன்னை விரட்டி விரட்டி பாலியல் உறவு கொண்டதாகவும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர்  கோனாவெங்கட் தனது டுவிட்டரில் கூறியதாவது:` நடிகை ஒருவர் சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களை பற்றியும், என்னைப் பற்றியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, போலீஸ் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். உண்மை நிச்சயம் வெளியாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் சட்டப்படி சந்திப்பேன்’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க பாஸ்-  பெண் பாவம் சும்மா விடாது ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசிய தம்பி ராமையா