இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் டீசர் பத்தே நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது. இந்த சாதனையை ரஜினியின் ‘காலா’ திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தயாரிப்பாளர் தனுஷ் ‘காலா’ படத்தின் டீசர் மார்ச்2ஆம் தேதி காலை பத்து மணிக்கு வெளியாகும் என்று தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார். இதனால் காலை பத்து மணிக்கு டீசரை தெறிக்க விட ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவு 12 மணிக்கே இந்த டீசர் வெளியாகிவிட்டது. மர்ம நபர்கள் காலா டீசரை லீக் செய்துவிட்டதால் வேறு வழியின்றி தனுஷும் வெளியிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்கள் பலருக்கு காலையில் தான் காலா டீசர் வெளியானது தெரிய வந்ததால் மெர்சல் சாதனையை இந்த படம் முறியடிக்கவில்லை