கோலிவுட் திரையுலகம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒற்றுமையுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் வேலைநிறுத்தத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என இமயமலையில் இருந்து திரும்பிய ரஜினி பேட்டியளித்திருந்தார்

இந்த நிலையில் ‘காலா’ படத்தை சென்சார் அனுப்புவதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடம் கிளியரன்ஸ் சர்டிபிகேட் கேட்டுள்ள தனுஷூக்கு அந்த சர்டிபிகேட்டை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறதாம் சங்கம்.

ரஜினியை பழிவாங்கவே இந்த இழுத்தடிப்பு என்றும், விஸ்வரூபம் 2 உள்பட ஒருசில படங்களுக்கு போட்டியாக காலா வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த இழுத்தடிப்பு என்று கிசுகிசுக்கப்படுகிறது.