சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் திரைப்படம் ‘அருவி’ இந்த படத்தை கோலிவுட் திரையுலகினர் அனைவருமே பாராட்டு வருகின்றனர். குறிப்பாக நாயகி அதிதிபாலனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

இந்த நிலையில் அதிதிபாலன் கேரக்டரில் முதலில் நயன்தாரா நடிப்பதாகத்தான் இருந்ததாம். ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களில் ஒப்புகொண்டதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உடம்பை குறைத்தால் கமிட் ஆகியிருந்த மற்ற படங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலும் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

நயன்தாராவை அடுத்து ஸ்ருதிஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர்களும் இதே காரணத்திற்காக இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த படத்தை ஏன் மிஸ் செய்தோம்? என்று மூவருமே மனதிற்குள் வருந்தியிருப்பார்கள் என்பது உண்மை