சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் தற்போது காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டம் நடந்து வருவதால் இந்த தருணம், புதிய கட்சி அறிவிப்புக்கான தருணம் இல்லை என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் போராட்டங்கள் முடிவடைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அதுவரை மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
எனவே ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்புக்கு இன்னும் குறைந்தது ஆறுமாத காலம் வரை ஆகும் என கூறப்படுகிறது