சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி விலக அட்லி காரணமா? அதிர்ச்சி தகவல்

சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ திரைப்படம் சமீபத்தில் கேன்ஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டதால் உலகப்புகழ் அடைந்தது. ஆனால் இந்த பரபரப்பு நீங்குவதற்குள் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதற்கு பலகாரணம் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அட்லிதான் என்று முனகுகிறது தயாரிப்பு நிறுவனம்

‘சங்கமித்ரா’ படத்தை தயாரிக்கும் அதே நிறுவனம் தான் விஜய்-அட்லி படத்தையும் தயாரிக்கின்றது. இந்த படத்துக்கு போட்ட பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகிவிட்டதாம். காரணம் அட்லியின் தாராள செலவு என்பதே தயாரிப்பு தரப்பின் குற்றச்சாட்டு

இதனால் வேறுவழியின்றி ‘சங்கமித்ராவுக்கு என ஒதுக்கி வைத்திருந்த பணத்தை விஜய்-அட்லி படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் செலவு செய்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சங்கமித்ராவை தொடங்க முடியாததால் ஸ்ருதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அட்லியின் தாராள் செலவுதான் ஸ்ருதி ‘சங்கமித்ரா’வில் இருந்து விலக காரணம் என்று கூறப்படுகிறது.