விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்தது. விக்ரம் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக இருந்தாலும் நடுநிலை ஆடியன்ஸ்கள் இந்த படத்தை ரசிக்கவில்லை என்பது வசூலில் தெரிந்துவிட்டது.

இதையும் படிங்க பாஸ்-  சந்தானத்தை மறந்து விட்ட ரசிகா்கள்?

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வசூலில் பாதிகூட இந்த படம் வசூல் செய்யவில்லை என்பதே உண்மையான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்

இந்த நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் போது விக்ரமின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், குறிப்பாக சூரியின் காமெடி காட்சிகள் வெட்டப்பட்டதற்கு விக்ரமே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் வெட்டப்படாமல் இருந்திருந்தால் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்றும் இயக்குனர் தரப்பில் முணுமுணுக்கப்படுகிறது.