இளம் இசைப்புயல் அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. அனிருத்தின் இந்த பெண் அவர் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தின் கெட்டப் என்றும், நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் நடிக்கவுள்ள கெட்டப் என்றும் இணையதளங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இந்த செய்திகள் அனைத்தையும் அனிருத் மறுத்துள்ளார். இவை அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ள அனிருத், இந்த பெண் வேட புகைப்படம் சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் இது எந்த படத்திற்காகவும் போடப்பட்டது இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் நடிப்பது உண்மைதான் என்றும், ஆனால் அந்த படத்தில் அவருடைய கெட்டப் யாருக்கும் தெரியாதவாறு ரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.