‘விவேகம்’ டீசர் ஏன் 57 நொடிகள்? எடிட்டர் ரூபன் தெரிவித்த ரகசியம்

அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசர் ஏன் சரியாக 57 வினாடிகளாக அமைக்கப்பட்டது என்பது குறித்து இந்த படத்தின் எடிட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

“விவேகம் திரைப்படம் அஜித் அவர்களின் 57-வது திரைப்படம் என்பதால் இந்த படத்தின் டீசரை 57 நொடிகளுக்கு ஓடும் வகையில் தயார் செய்யுமாறு டுவிட்டர் வாயிலாக ரசிகர் ஒருவர் ஆலோசனை கூறியதாகவும், இந்த ஆலோசனை எனக்கும், இயக்குனர் சிவா அவர்களுக்கும் பிடித்திருந்ததால் ‘விவேகம்’ டீசரை 57 நொடிகள் மட்டும் ஓடுமாறு தயார் செய்தோம் என்றும் எடிட்டர் அந்தோனி ரூபன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் டீசர் வெளியான தேதி மற்றும் நேரத்தை கூட்டினாலும் 57 வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 11.05.2017, 12.01ஐ கூட்டி பாருங்கள் 57 வரும்.

தேதி 11- 1+1 = 2
மாதம் 0+5 = 5
வருடம் 20+17= 37
நேரம் 12+01 = 13

மொத்தம் =57