கர்நாடகாவில் தனது காதலியோடு தந்தை சென்று விட்டதால் அம்மாவோடு மகள்கள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கர்நாடகா மாநில மின்வாரியத்துறையில் பணிபுரிபவர் சித்தய்யா. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் மானசா மற்றும் பூமிகா என்ற இரு மகள்களும் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று இந்த குடும்பத்தில் புயலாக வீசியுள்ளது சித்தய்யாவின் கள்ளக்காதல். இதையறிந்த ராஜேஸ்வரி மற்றும் மகள்கள் இருவரும் சித்தய்யாவிடம் சண்டையிட்டுள்ளனர்.

இதனால் அவர் கோபித்துக்கொண்டு தன் காதலியோடு தனியாக வாழ்ந்து வருகிறார். தன் வீட்டுக்கு வருவதேயில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன் உளைச்சலுக்கு உள்ளான மூவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து ராஜேஸ்வரியின் அண்ணனுக்கு ஒரு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதில் ‘ நல்ல அப்பா கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்னுடைய அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்.’ என இருந்துள்ளது.

இதைப்பார்த்து சந்தேகமடைந்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவரும் மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்துள்ளனர். இதையடுத்து போலிஸார் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.