சிங்கப்பூரில் கணவன் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டதை அடுத்து அவரைக் கொலை செய்துள்ளார் மனைவி !

இந்தியாவில் இருந்து வாழ்வாதாரத்துக்காக சிங்கப்பூர் சென்று வாழ்ந்து வந்தது அந்தக் குடும்பம். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களது குடும்ப வாழ்வில் கணவனின் பணிச்சுமையால் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வர ஆரம்பித்துள்ள அவரிடம் மனைவி சண்டைப் போட ஆரம்பித்துள்ளார்.

இதனால் மனைவியை  விவாகரத்து முடிவு செய்த அந்த கணவர் அதை மனைவியிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி கணவன் தூங்கியதும் அதிகாலை 5 மணியளவில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனை அவர்களது மகள் நேரில் பார்த்து உறைந்து போயுள்ளார். உடனடியாக அவர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, மனைவி தன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.