நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சொம்பனார்கோவிலை சேர்ந்த 48 வயதான அறிவழகன் என்பவரை அவரது மனைவி ரேகா தனது கள்ளக்காதலன் ராஜசேகர் துணையுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்தார் என நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவழகன், ரேகா தம்பதியனருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அறிவழகன் கோவயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி ரேகாவுக்கும் மேல பகுதியை சேர்ந்த ராஜசேகார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து ரேகா தனது கள்ளக்காதலனுடன் பலமுறை தனது விட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அறிவழகனின் உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் மூலம் அறிவழகனுக்கு தெரியவர, அவர் ஊருக்கு வந்து மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இதனால் ரேகாவின் கள்ளக்காதலுக்கு அறிவழகன் பெரும் இடைஞ்சலாக இருந்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அறிவழகன் ரேகாவிடம் கள்ளக்காதலை விட்டுவிடும்படி சண்டைபோட்டுள்ளார். பின்னர் அறிவழகன் தூங்கிவிட்டார். இதனையடுத்து ரேகா தனது கள்ளக்காதலன் ராஜசேகரை போன் போட்டு அழைத்து தூங்கிக்கொண்டிருந்த கணவனை கொல்ல திட்டம் தீட்டினர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து தலையணையால் அறிவழகனின் முகத்தை அழுத்தி கொலை செய்தனர். மறுநாள் காலை அறிவழகன் மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார் ரேகா. ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த உறவினர்கள் அறிவழகனின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி ரேகாவையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ரேகா தனது கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கொலை செய்தது ஒப்புக்கொண்டார். தலைமறைவாக உள்ள ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.