கமல் வந்தால் நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன்: திருநாவுக்கரசர்

04:30 மணி

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று காலை முதல் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று வதந்தி கிளம்பியுள்ளது. மேலும் கமல்ஹாசனை காங்கிரஸ் கட்சிக்க்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள் என்று ராகுல்காந்தி, திருநாவுக்கரசரிடம் கூறியிருப்பதாகவும், அந்த வதந்தியில் கூறப்படுகிறது

Loading...

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், ‘கமல் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நல்லது. ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கவே வாய்ப்பு அதிகம் என்று கூறினார்.

நேற்று நடிகை குஷ்பு கமலிடம் உங்களை தோளில் ஏறி பதவி சுகம் பெற நினைப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும், நான் என்றும் உங்கள் பக்கம் என்றும் கூறியிருந்த நிலையில், கமல் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நல்லது என்று இன்று திருநாவுக்கரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393