கமலின் அரசியல் பிரவேசம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அடுத்தக்கட்டமாக கட்சி தொடங்குவது, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துவது என்ற முனைப்பில் இருக்கும் கமல்ஹாசன் அடுத்தடுத்து அனைத்து தொலைகாட்சிகளுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்துக் கொண்டு வருகிறார். அந்த வரிசையில், சமீபத்தில் ஒரு பேட்டியின் போது விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா? என்ற கேள்வி அவர் முன் எழுப்பப்பட்டது.

இதற்கு கமல் அளித்த பதில், அரசியலில் எங்களுடைய கொள்கைகளுக்கு அவர் உடன்பட்டவராக இருந்தால் கைகோர்த்துக் கொள்வோம். மற்றபடி, இடையூறாக இருந்தால் அதுதொடர்பான விமர்சனங்கள் தெரிவிக்கப்படும. வெற்றி பெற்ற நடிகர்கள் எல்லோரும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படித்தான் நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல், தம்பி விஜய்யும் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றார். விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? என்ற கேள்விக்கு கடைசிவரை கமல் பதிலே தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.