பொன்.ராதாகிருஷ்ணனுடன் விவேக் சந்திப்பு. பாஜகவில் சேருகிறாரா?

ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் உடல்நலம், அதிமுகவின் பிளவு ஆகியவை காரணமாக தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்றும் அதற்கு இதுவே சரியான தருணம் என்றும் கருதி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது பாஜக

முதல்கட்டமாக கட்சியை பிரபலப்படுத்த திரைத்துறையினர்களை கட்சியின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பயனாக கங்கை அமரன், எஸ்.வி.சேகர், காய்த்ரி ரகுராமன் உள்பட பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் இன்னும் சில திரையுலகினர்களுக்கு பாஜக வலைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் விவேக் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விவேக் பாஜகவில் சேருவாரா? என்று கூறப்படும் நிலையில் இதுகுறித்து விவேக் தரப்பினர் கூறியபோது, ‘மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது உண்மை எனவும், மரம் நடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’ என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.