“பூனையாகவே பிறந்திருக்கலாமோ !” – ஏக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை

ரிச்சா சாதா  கேஸ் ஆஃப் வாஸ்பர் எனும் நகைச்சுவைப் படம் மூலம் பிரபலமானவர். பூனைகளைப் போன்று எதற்கும் வருத்தப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்வதை விரும்புவதாக பிரபல சமூக வலைதளம் ஒண்ணுல தெரிவிச்சிருக்காரு. எப்படி பூனைகளைப் பற்றி இப்படி ஒரு ஆய்வு? அம்மணி ஒரு பூனை விரும்பி, இவர் கம்லி என்ற பெயர்ல ஒரு பூனையை வளர்த்துட்டு வராரு. ‘கம்லி’க்கு இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் கூட்டமே இருக்குன்னா பாத்துக்கங்களேன்!

“கம்லி மழையும், காற்றும் மிகவும் பிடித்துள்ளது. மழை சத்தம் கேட்டதும் சன்னல் பக்கம் ஓடிவிட்டாள்…நாமும் பூனைகள் போல் இருந்திருக்கலாம். வேலை, மாவு, சிறுவன், உடல், சூழல், பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஓய்வெடுத்திருக்கலாம். நான் ஒரு பூனையாக விரும்புகிறேன்” – என்று கம்லியின் சிறு வீடியோ போஸ்ட் செண்டிமென்டா பேசியிருக்காரு இந்த ஃபிலிம்பேர் விருது நாயகி.

‘ஃபக்ரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஃபக்ரி ரிட்டர்ன்ஸ்’ நடிப்பது குறிப்பிட தக்கது. இந்தப் டிசம்பரில் மாதம் திரைக்கு வருகிறது. அம்மணிக்கு அப்படி என்ன கவலையா இருக்கும்??