Home தமிழகம் நள்ளிரவில் ஆடையை அவிழ்த்தார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

நள்ளிரவில் ஆடையை அவிழ்த்தார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

தர்மபுரியை சேர்ந்த பெண் ஒருவர் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நாத்தனார்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி அவரது நாத்தனார்கள் நள்ளிரவில் தொப்பூர் அணைக்கு அழைத்துச் சென்று, அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மொட்டை அடித்து, நாக்கில் சூடு வைத்து, தாலியை கழற்றி பின்னர் கணவனை கட்ட வைத்துள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே தண்டனையை அனுபவித்துவிட்டதாலும் இதுவே போதுமானது என கூறினார்கள்.

மேலும் அந்த பெண்ணுக்கு நாத்தனார்கள் நான்கு பேரும் 15000 ரூபாய் அபராதமாக வழங்க வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது, கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கண்டனத்தையும் தெரிவித்தனர்.