டெல்லியில் செயற்கை ஆணுறுப்பு மூலம் மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிவானி என்கிற பெண் தொடர்ச்சியாக தான் சந்திக்கும் பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களை செயற்கை ஆணுறுப்பு மூலம் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களை தாக்கியும் வந்துள்ளார். இதை வெளியே சொன்னால் அவமானம் என கருதி யாரும் புகார் கொடுக்கவில்லை.

இந்நிலையில், அவர் மீது ஒரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். தன் கை கால்களை கட்டி செயற்கை ஆணுறுப்பு மூலம் தன்னை ஷிவானி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, ஷிவானியை 377 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார் அவரை திகார் சிறையில் அடைத்தனர்.