ராஜஸ்தான் மாநிலத்தில் 19 வயதேயானப் பெண்ணை அவரது காதலனைத் தாக்கிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த பெண் அதேப் பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால் அந்தப் பெண் இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஜூலை 13 ஆம் தேதி மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

அதில் அந்த ஆண் நிலைதடுமாற அவர் கண் முன்னாலேயே அந்த பெண்ணை 5 பேரும் கட்டாய வல்லுறவுக் கொண்டுள்ளனர். இதனால் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது. இந்த விஷயத்தை வெளியே சொன்னால் தங்களுக்குதான் அசிங்கம் என நினைத்த அந்த காதலர்கள் போலிஸில் புகார் அளிக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தால் மனமுடைந்த அந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தற்கொலை பற்றி விசாரணை மேற்கொள்ளும் போது அந்த கும்பலை சேர்ந்த ஜிதேந்திரா என்ற ஒருவர் சிக்கியுள்ளார். அவரையும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் மீண்டும் விசாரிக்க இந்த வல்லுறவு சம்பவம் வெளியாகி போலிஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.