திருச்சி அருகே காதலனுக்காக கணவன் மற்றும் கைக்குழந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளார் சென்றுள்ளார் ஒரு பெண்

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தில் வசிப்பவர் கனகராஜ். அதிகமாகப் படிக்காத இவர் சென்னை மற்றும் சொந்த ஊரில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவருக்குக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக துறையூர் அருகே உள்ள கீராம்பூர் என்கிற கிராமத்தில் இருந்து சரண்யாவோடு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் இருவ்ருக்கும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சரண்யா கனகராஜிடம் மேல்படிப்பு படிக்க ஆசை என்று கேட்க கனகராஜும் படிக்க வைத்துள்ளார். திடீரென கனகராஜுக்கு வந்த போன் காலில் பேசிய பெண் ஒருவர் ‘உங்கள் மனைவியின் செல்போனை வாங்கிப் பாருங்க’ என சொல்ல கனகராஜ் சரண்யாவின் போனைப் பார்த்துள்ளார். அதில் சரண்யா மற்றொரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கவே அந்த நபர் சரண்யாவின் ஊரைச் சேர்ந்த செல்வம் என்று இருவருக்கும் சிறுவயது முதலே பழக்கம் இருந்தது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் இனிமேல் ஒழுங்காக இருக்கிறேன் என சரண்யா கூறியதை நம்பிய கனகராஜ் சமாதானமடைந்துள்ளார். திடீரென ஒரு நாள் இரவு உணவில் அனைவருக்கும் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வத்தோடு சென்றுவிட்டார் சரண்யா.

பின்னர் இருதரப்பையும் போலிஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த நடத்திய பேச்சுவார்த்தையில் சரண்யா தனக்குக் கணவன் வேண்டாம் காதலனே வேண்டும் என சொல்லிவிட்டு சென்றுள்ளார். கனகராஜ் அது தன்க்குப் பிறந்த குழந்தை அதனால் தன்னிடம் கொடுக்க வேண்டும் என சொல்லியபோது குழந்தையையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் சரண்யா.

கனகராஜ் தரப்பில் இருவர் மீதும் வழக்குத் தொடர முயன்றபோது அதற்கு வாய்ப்பில்லை எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி யார் வேண்டுமானாலும் விருப்பப்பட்டவர்களோடு வாழலாம் எனப் போலிஸார் கூறியுள்ளனர்.