திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த தச்சமலை அருகே கடந்த மாதம் 29-ஆம் தேதி பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு பிணமாக கிடந்தார். ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் அந்த பெண்.

இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி, மணப்பாறை போலீஸ் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் அந்த பெண் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனம்பட்டியை சேர்ந்த மலர்க்கொடி என்பது தெரியவந்தது. அடுத்தக்கட்ட விசாரணைக்கு பின்னர் சிவகங்கை அம்மாபட்டியை சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நத்தத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த முருகனுக்கு அவரது மனைவியின் மூலம் மலர்க்கொடியின் தொடர்பு ஏற்பட்டுள்ளது, முருகன் வேலை பார்க்கும் கோழிப்பண்ணைக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தான் அந்த பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு கள்ளக்காதலாக மாறி அவரை காரியப்பட்டியில் வைத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார் முருகன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மலர்க்கொடியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய அவளது முந்தைய கால வாழ்க்கை குறித்து தெரியவந்துள்ளது முருகனுக்கு.

முதலில் ராமர் என்பவருடன் வாழ்ந்த மலர்க்கொடிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதன் பின்னர் மணிகண்டன் என்பவருடன் வாழ்ந்து இரண்டு பெண் குழந்தை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிகண்டன் இறந்துபோக பெண் குழந்தைகளை ஆசிரமத்தில் விட்டுவிட்டு துபாய் சென்றுள்ளார் மலர்க்கொடி.

மீண்டும் தமிழகம் திரும்பிய மலர்க்கொடி பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட முருகன் மலர்க்கொடியுடன் சண்டையிட, தாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை முருகனின் குடும்பத்தாருக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார் மலர்க்கொடி.

இந்நிலையில் அவளை கொலை செய்ய திட்டமிட்ட முருகன், கடந்த 27-ஆம் தேதி மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி மலர்க்கொடியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போதும் அவள் பணம் கேட்டதால் அவளை கொன்றுவிட்டு முகத்தை சிதைத்ததாக கூறியுள்ளார் முருகன்.