கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் மகளின் தோழியை பெண்மணி ஒருவர் கடத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் என்னும் ஊரில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதேக் கல்லுரியில் படிக்கும் தனது தோழியின் வீட்டுக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் அவரது தோழியின் தாயுக்கும் இடையில் நெருக்கமான பாலியல் உறவு உண்டாகியுள்ளது.

இதனை சில நாட்களில் கண்டுபிடித்த அந்த பெண்ணின் தாய், தனது மகளையும் அந்த பெண்ணையும் கண்டித்துள்ளார். இதில் மாணவி மனம் மாறினாலும் அந்த பெண் மனம் மாறவில்லை. கல்லூரிக்கு செல்லும் வழியில் மாணவியிடம் ‘உன் தாய் மேல் ஆசிட் ஊற்றிவிடுவேன்’ எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சில நாட்கள் எந்த தொல்லையும் போலிஸார் பாதுகாப்புடன் அந்த மாணவி கல்லூரிக்கு சென்றுள்ளார்.

ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு திடீரென அந்த மாணவியை அந்த பெண் கடத்தியுள்ளார். இது சம்மந்தமாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.