கொலம்பியாவில் பெண் ஒருவர் தன் தொடைப் பகுதியின் உள் போதைப் பொருளைக் கடத்திக்கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பெண் ஒருவர் சரியாக நடக்க முடியாமல் வந்துள்ளார். அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த போது தனது காலில் அடிபட்டு இருப்பதாக சொல்லியுள்ளார். ஆனால் அவரை நம்பாத அதிகாரிகள் அவரை ஸ்கேன் பண்ணி பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவரது தொடையில் தையல் போட்ட பகுதியில் மேல் சதைக்குக் கீழ்ப்புறம் பை போன்ற பொருள் ஒன்ற்ய் இருந்துள்ளது. அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை செய்து அந்தப் பொருளை எடுத்தபோது அது திரவ வடிவிலான கொக்கைன் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த கொலம்பிய போலீஸார் அவர் யாருக்காக இந்த போதைப் பொருளைக் கடத்துகிறார். அவருக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.