10.6 கோடி கிரெடி கார்டு பயனாளர்களின் தகவலை ஒரு இளம்பெண் திருடிய சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் வசித்து வருபவர் பெய்ஜ் தாம்சன்(33). இவர் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அமெரிக்காவின் பிரபல கிரெடிட் கார்டு சேவை நிறுவனமான கேபிடல் ஒன் மூலம் கிரெடிட் கார்டை பெற்றும் அதை பயன்படுத்தி வரும் 10.60 கோடி பேரின் தகவல்கள், அதாவது அவர்களின் பெயர், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட விபரங்களை திருடியுள்ளார்.

இதை ஹிட் கப் எனும் சமூக வலைத்தளம் மூலம் இதை அவரே தெரிவித்து தம்மட்டம் அடித்துள்ளார். இதைப்பார்த்த ஒருவர் இதுபற்றி கேபிடல் ஒன் நிறுவனத்தில் புகார் அளித்தார். எனவே, இதுபற்றி எஃபிஐ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே, அவர்கள் தாம்சனை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த தகவலை அவர் திருடியுள்ளாரே தவிர, அதை தவறாக பயன்படுத்தவில்லை. மேலும், கிரெடிட் கார்ட் பாஸ்வார்டு உள்ளிட்ட எதையும் திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், நீதிமன்றத்தில் அவருக்கு 50 ஆயிரம் டாலர் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.