மாதவிடாய் ரத்தத்தை மாதந்தோறும் முகத்தில் தடவி புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஒரு முறை நிகழும் ரத்த உதிரப்போக்கு ஆகும். இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதமும் நடந்தால் தான் அப்பெண், தாய்மை நிலைமையை அடைய முடியும். எனவே இயற்கையான மாதவிடாய் நிகழ்வு குறித்து விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது, எனினும் இன்று வரை பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துகொண்டேதான் வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பெண் டிமட்ரா நைக்ஸ் (26). அண்மை காலங்களாகவே தனது மாதவிடாய் ரத்தத்தை எடுத்து பூசியபடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.இதனை பார்த்து அறுவறுப்பாக இருப்பதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதேநேரம் டிமட்ராவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏன் இப்படி செய்றீங்க என அவரிடம் சிலர் கேட்டுள்ளனர். இதற்கான காரணத்தை அந்த பெண் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிமட்ரா தன்னுடைய 12 வயதில் பூப்படைந்தவுடன் வெட்கி தலைகுனிந்து, நண்பர்களிடம் நெருங்கி பழக கூச்சப்பட்டுள்ளார். இந்த விஷயம் தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு தெரிந்துவிட கூடாது என நினைத்து தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிறகு தன்னுடைய 20 வயதிலிருந்து இந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய முயற்சித்து டிமட்ரா தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

ஏனென்றால் நம்முடைய சமூகம் மாதவிடாய் ஒரு அழுக்கு, சிரமமானது என நமக்கு சொல்லியிருக்கிறது . ஆனால் அதுவும் ஒரு இயற்கையான நிகழ்வு தான். நான் இந்த சடங்கின் மூலம் இன்பம் அடைகிறேன். இந்த சமூகம் எப்பொழுது இதுவும் சாதாரணமான நிகழ்வு என நினைக்கிறதோ, அதுவரை நான் இந்த புகைப்படங்களை மாதம் தோறும் பதிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.