சென்னை வியாசர்பாடி ரெயில் நிலையத்தில், காதலன் கண் எதிரேயே மின்சார ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி காலனியை சேர்ந்தவர் முனுசாமி. என்பவருடைய மகள் காமேஸ்வரி, இந்த பெண் தன்னுடன் ஒன்றாக படித்த, அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (19) என்பவரை காதலித்து வந்தாராம்.

இதையும் படிங்க பாஸ்-  தனியாக இருந்த சிறுமி ; வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் - இறுதியில் நேர்ந்த விபரீதம்

இதையறிந்த அவரது பெற்றோர், காமேஸ்வரியை கல்லூரி அனுப்ப மறுத்துவிட்டனர்.

இருப்பினும் இருவரும் காதலை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று சந்தித்து பேசினர். அவர்கள் சென்னை கடற்கரைக்கு செல்வதற்காக வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து நின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  சரக்கடிக்க மகன் பணம் தராததால் தந்தை தற்கொலை

அப்போது இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த காமேஸ்வரி, திடீரென அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில் முன் பாய்ந்தார். இதில் காதலன் கண் எதிரேயே அவர் தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்/

இதையும் படிங்க பாஸ்-  பெண் காவலர் தற்கொலை - ஆண் காவலர் மீது வழக்குப்பதிவு

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார், தற்கொலை செய்து கொண்ட காமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது காதலன் சுந்தரிடம் விசாரித்து வருகின்றனர்.