பிளாக் அண்டு வைட் காலத்திலும் சரி இப்போதுள்ள சிட்டி ரோபோ நவீன காலத்திலும் சரி… பெண்களைக் கவர்வது எப்போதுமே ஆண்களுக்குப் பிடித்தமான விஷயம்தான். அரும்பு மீசை முளைக்கும் பருவத்தில் பெண்ணைக் கவர செய்த லீலைகள் இப்போது நினைத்தால் சிரிப்பு வரும். ஆறும் அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல… ஆழம் எது ஐயா.. இந்த பொம்பள மனசுதாயா… உண்மையில் பெண்கள் மனது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவ்வளவு ஆழமில்ல… சோ சிம்பிள்…

இதையும் படிங்க பாஸ்-  காதலா...? காமமா...?

1. பாவனை வேண்டாம்

உங்கள் உண்மைத் தன்மையுடன் பெண்ணை அணுகுங்கள். போலித்தனம் வேண்டாம். பேச்சிலும் சரி நடத்தையிலும் சரி, உண்மையாக இருக்கும் ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்கும். பெண்ணைக் கவர வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி பின்னர் எக்குதப்பாய் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட உண்மை சொல்லி நேர்பட பேசி பழகுவது சிறப்பானது.

இதையும் படிங்க பாஸ்-  'விவேகம்' வியாபாரத்தை முந்தியது 'தளபதி 61'

2. பாராட்டுங்கள்

பாராட்டுக்கு மயங்காதவர் யார்? அவரிடம் உங்களுக்குப் பிடித்த குணங்கள், அவரின் தனி சிறப்பு, அவர் செய்த செயல், அவரின் புன்னகை…. எதுவாக இருந்தாலும் தயங்காமல் பாராட்டுங்கள். முகத்திற்கு நேரே இவை உன்னிடம் எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுங்கள். அவர்கள் செய்யும் விஷயங்களில் ஈடுபாடு காட்டுங்கள். அது சமையலாக இருக்கலாம் சமூக நலனாக இருக்கலாம்.

இதையும் படிங்க பாஸ்-  புத்தகம் படிப்பவர்களிடம் இருக்கும் 5 குணங்கள்!

3. தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையுடன் இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்கும் (அனைவருக்கும் பிடிக்கும்). தோல்வியால் துவண்டு போகாமல் எதிர்நீச்சல் போடும் வீரமான ஆண்களைப் பிடிக்காத பெண்களைக் காண்பது அரிது.

4. நகைச்சுவை
சிடு சிடு என்றிருப்பவர்களை விட நகைச்சுவை குணத்துடன் இருப்பவர்கள் எளிதல் மனதைக் கவரக் கூடியவர்கள்.