அஜித்தின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து வியந்த செர்ஜ்

அஜித் செயல்படுத்திய நம்பமுடியாத ஆக்ஷன் காட்சிகள் தன்னை வியப்படைய வைப்பதாக கூறியுள்ளார் ஹாலிவுட்டின் சண்டைப் பயிற்சியாளர் செர்ஜ் க்ரோசோ கிரேசின்.

“அவர் அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும் டூப் இல்லாமல் செய்துள்ளார். அவர் ஒரு நேர்த்தியவாதி மற்றும் கடின உழைப்பாளி.நாங்கள் இருவரும் நிறைய பேசியுள்ளோம், அதன் நினைவுகள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. நான் தற்காப்புக் கலைகளின் மாஸ்டராக இருப்பதால் என் காட்சிகள் அனைத்தையும் மிகவும் விரும்பி நடித்துள்ளேன்”என்று அவர் கூறினார்.

செர்ஜ் க்ரோசோ கிரேசின், ஹை-பட்ஜெட் திரைப்படங்களான ‘கேசினோ ராயல்’, ‘300: ரைஸ் ஆஃப் எம்பையர்’, ‘தி டிரான்ஸ்ஸ்பட்டர் ரிஃபுயூல்டு’ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். “விவேகம்”, அஜித் ஒரு இன்டர்போல் ஏஜெண்டாக நடித்துள்ளார், செர்ஜ் அஜீத்தின் ஐந்து பேர் கொண்ட குழு உறுப்பினரில் ஒருவராக நடித்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாமுழுவதும் உள்ள அழகிய இடங்களில் படமெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.