மொபைல் போன் உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக மடக்கும் போன்களை நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

ட்ச் ஸ்கீரின் போன்களின் உலகில் அடுத்தக் கட்ட பாய்ச்சலாக போல்டபிள் எனப்படும் மடக்கும் போன்கள் கருதப்படுகின்றனர். சாம்சங் நிறுவனம் இதற்கு அச்சாரம் இட இப்போது ஜியோமி நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

இது தொடர்பான விவரங்களை ஜியோமி நிறுவனம் தங்கள் பக்கத்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த மாடல் போன்கள் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஸியோமி இந்தியாவின் செல்போன்  மார்க்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.