என்ன தான் பிாியாணி ருசியாக இருந்தாலும் தினமும் சாப்பிட முடியுமா? நடிகை நமீதா

என்ன தான் பிாியாணி ருசியாக இருந்தாலும் தினமும் சாப்பிட முடியுமா? நடிகை நமீதா

மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது.

பாடல்கனை தயாரிப்பாளர்கள் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார்  மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’   சதீஷ்குமார்,  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைபப்பாளர் நிரோ பிரபாகரன் ,  ‘யாகன்’ படத்தின் இயக்குநர் வினோத் தங்கவேல், மேலும் நடிகர்கள்  எஸ்.வி.சேகர் ,மனோஜ் கே.பாரதிராஜா, ‘ஒளி’ பட நாயகன் வீரா, ஒளிப்பதிவாளர் மகேஷ் ,எடிட்டர் சரண் சண்முகம்,நிர்வாகத் தயாரிப்பாளர் தினேஷ் குமார் ,  ‘துளி’ அமைப்பு நிறுவனர் ஜமுனா, நா. முத்துக்குமாரின் மாமனார், மகன் ஆதவன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட நமீதா பேசியதாவது ” வழக்கமான நிகழ்ச்சியிலிருந்து  இது வித்தியாசமான , படநிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. வழக்கமாக படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை எப்போதும் வெளி மாநிலம், வெளிநாட்டிலிருந்து தான் நடிக்க  இங்கே கொண்டு வருவார்கள். ஆனால் தற்போது புதுமையாக தமிழே தெரியாத கதாநாயகனை இறங்கியுள்ளனா். இந்த கதாநாயகன்  சஜன் குலோபலாக டென்மார்க் கிலிருந்து வந்துள்ளார்.

ஆனால் கதாநாயகி லோக்கலாக இருக்கிறார். என்னதான் ருசியாக இருந்தாலும் பிரியாணியைத் தினமும் சாப்பிட முடியாது.எல்லாவற்றிலும் வித்தியாசம் வேண்டும் . இப்படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். “என்றார்.