இலங்கையில் நடந்த போர் குறித்த திரைப்படமான ‘யாழ்’ குறித்த செய்திகளை தற்போது பார்ப்போம்

இலங்கையில் போர் நடக்கும் போது ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் “என்ன நடக்கின்றது என்று மூன்று கதைகளில் ஒரு வித்தியாசமான திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

போர் நடக்கும் சூழலில் தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றார்கள். அப்போது.. ஒரு கதையில் சிங்கள இராணுவ அதிகாரியான அசோகா (டேனியல் பாலாஜி) புலிகளின் ஒரு முக்கிய பெண் போராளி தலைவி தமிழ் செல்வியை தேடுகின்றான். தமிழ் செல்வி (நீலிமாராணி) யை பிடித்து வைத்து விடுகிறான்.
மற்றொரு கதையில் அதன் (வினோத்) ஊரைவிட்டு போகும் தன் காதலி நிலா (லீமாபாபு) உடன் செல்ல முயற்சிக்கும் போது வழியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து அநாதையாக இருக்கும் குழந்தை அமுதினி (ரக்ஷனா) அவன் பயணத்தை இடை மறிக்கிறது. கதையில் லண்டனில் இருந்து தன் சொந்த ஊருக்கு வரும் யாழினி (மிஷா) போருக்கு முன் தன் காதலனை சந்திக்க அலைகின்றாள்.
போரின் பின்னணியில் நடக்கும் இந்த மூன்று கதைகளும் தமிழ் மக்களின் அவலங்களை இரண்டு மணி நேரத்தில், முன்னுக்கும் பின்னுக்குமாக திரைக்கதை அமைத்து தமிழ் மக்களின் போராட்டக் களத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் ரசிகர்களை ஈழ மண்ணிற்கு இரண்டு மணி நேரம் கொண்டு செல்கின்ற முதல் ஈழத்தமிழ் திரைப்படம். முழுக்கதையும், கதாபாத்திரங்களும், பாடல்களும், கதை வசனமும் ஈழத்தமிழில் உள்ளது.

இந்த படத்தில் வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார் சுப்பிரமனி, மிஷா கோஷல், லீமா ரணி, லீமா பாபு மற்றும் பேபி ரக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர்.