பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2வின் இன்று வெளியாக உள்ள முதல் ப்ரோமோவில் யாஷிகா ஆனந்த் ஐஸ்வர்யா தத் இருவரும் சேர்ந்து செண்டராயன் உடன் சேர்ந்து டான்ஸ் ஆடி மகிழ்ச்சியாக உள்ளனர். இதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அவர்களை பார்த்து மிகவும் மோசாமான வார்த்தைகளை பேசி கலாய்க்கின்றனர்.

nskramya

யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத் இளம் வயதினர். அந்த வயத்திற்குரிய கலகலப்பான சேட்டைகளை பிக் பாஸ் வீட்டில் அரங்கேற்றி வருகின்றனர். இவர்களது செயல்கள் ஒவியாவை போல் இருந்தாலும் அந்த இளம் வயதிற்குள் உள்ள குறும்புகளை செய்து பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருக்கின்றனர். இவர்கள் செய்யும் லூட்டிகளை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதுவும் குறிப்பாக என்.எஸ்.கே பேத்தியும் பாடகியுமான ரம்யா இந்த மாதிரி லூசுகளை எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி சேர்த்தார்கள் என்று கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ரம்யா யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத், செண்ராயன் இவர்கள் அடிக்கும் லூட்டியை பார்த்து எப்படி இந்த லூசுகளை எல்லாம் உள்ளே விட்டார்கள் என்று கூறுகிறார். சக போட்டியாளர்கள் இப்படி கேலி பண்ணுவது குத்தலாக உள்ளது. இதை பார்த்த இருவரும் தனியாக பேசும் போது கொஞ்சம் கடுப்பாக தான் பேசி கொள்கிறார்கள். நம்ளை பார்த்து இவர்கள் எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கிறங்கனு அனைவரும் நினைக்கிறாங்க. ஆனால் இனிமேல் தான் நம்மள பாத்தி இவர்களுக்கு தெரியும். நாம் எவ்வளவு சீரியசான ஆளுங்கனு என சொல்கிறார் யாஷிகா.

aiswarya dutt

ஐஸ்வர்யா தத்வும் கடைசியில் ஃபைனல் போகப் போவது இரண்டு பேர் தான் என்று கூறுகிறார். இவர்கள் இவரும் பேசுவதிலிருந்து மிகப்பெரிய திட்டத்தில் இருக்கின்றனர் என்று தெரிகிறது.

Loading...