ஆமாம் நான் இயக்குவது ஆபாச படம்தான். ஒரு இயக்குனர்

09:59 மணி

‘எக்ஸ் வீடியோஸ்’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ள இயக்குனர் சஜோசுந்தர், ‘நான் இயக்கியுள்ளது ஆபாச படம் தான், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ஆபாச படம் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Loading...

‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சஜோசுந்தர் கூறியதாவது:

‘மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. “பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை. இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.

இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது.  அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் எக்ஸ் வீடியோஸ்.

“ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது. இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே.

இவ்வாறு இயக்குனர் சஜோசுந்தர் கூறியுள்ளார்.

(Visited 28 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393