ஹீரோவா..? வேண்டவே வேண்டாம்.. அலறும் யோகி பாபு

கதாநாயகனாக நடிக்க விருப்பமில்லை என காமெடி நடிகர் யோகிபாபு கூறியதோடு, அவருக்கு வந்த பல வாய்ப்புகளையும் மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. ரெமோ, ஆண்டவன் கட்டளை, ஹலோ நான் பேய் பேசுகிறேன் உள்ளிட்ட படங்களில் அவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போதும் அவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கதாநாயகனாக நடிக்கும் படி அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது “ என்னை ஹீரோவா நடிக்க கேட்டு பலர் அணுகினார்கள். ஆனால், நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய உயரம் எனக்கு தெரியும். நான் ஹீரோவானால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். ஒரு வேளை நான் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெற்றி பெற்று விட்டால், அதன் பின் ஹீரோவா அல்லது காமெடியனா என்ற தள்ளாட்டம் வந்து விடும். என் முகத்தை வைத்து எத்தனை படங்கள் எடுக்க முடியும்?.

நான் ஹீரோவாக நடித்தால் எனது வாழ்க்கை மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையும் வீணாப்போகும். அதனால் சினிமாவில் இருக்கும் வரை காமெடியனாகவே நடிக்க முடிவு செய்துள்ளேன்” என கூறினார்.