தமிழ் சினிமா ட்ரெண்ட் இப்போ மாறிக்கிட்ருக்கு யோகிபாபுவுக்கு நயன் தாரா கிடைக்கிறாங்க என்று விவேக் ஒரு விழாவில் பேசினார். அதை போலத்தான் யாருக்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை ஹீரோவை புக் செய்யும் முன்னால் யோகிபாபுவைத்தான் புக் செய்கிறார்கள் அந்த அளவு அவருக்கு காமெடி கை கொடுக்கிறது.

கோலமாவு கோகிலாவில் நயன் தாராவுக்கும் இவருக்குமான ரொமான்ஸ் சாங் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் சாம் ஆண்டன் இயக்கும் படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறாராம் இதில் தனியார் செக்யூரிட்டியாக பணிபுரியும் யோகிபாபு, அவர் இருக்கும் இடத்தில் இருக்கும் மக்களை ஒரு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாம்.