உருவங்களும், நிறங்களும் சினிமா உலகில் மிகப்பெரிய ஏற்றத்தை தரும் என்பது எப்போதும் பொய்யாகி வருகிறது. அதற்கு பலர் உதாரணம் என்றாலும் இன்றைக்கு யோகி பாபுவை மிகச்சிறந்த உதாரணமாக சொல்லாம். அதுபோல அந்த காலத்து காமெடி நடிகர் நாகேஸை சொல்லலாம். இவரின் உருவத்தை வைத்து எடை போட முடியாது. அந்தஅளவுக்கு நடிப்பில் முத்திரை பதித்தவர். அதனால் உருவத்தும் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நிருபித்தவர்கள் இவர்கள்.

சிறிய ரோலில் அறிமுகம் ஆகி, இன்று மிகச்சிறந்த காமெடி நடிகராக உருவாகி வருகிறார் யோகி பாபு. பல முக்கிய நடிகர்களுக்கு சூரியை தொடர்ந்து இவர் தான் மெயின் காமெடி நடிகராக மாறிவிட்டார்.

இவர் கோலமாவு கோகிலாவில் ‘கல்யாண வயசு தான் வந்திடுச்சு டீ’ என்று நயன்தாராவை நினைத்து பாடுவார். இந்த பாடல் அவரது வீட்டில் இருப்பவங்களுக்கும் அவர்கள் வீட்டில் கேட்டுவிட்டது போல் தெரிகிறது. யோகி பாபு சமீபத்தில் ஜாலியான பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் திருமணம் எப்போது யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனால் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.