நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது கோகோ என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா படமானது நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் தலைப்பை பார்த்தும் ரசிகா்கள் அனைவரும் நயன்தாரா கோலமாவு விற்பனை செய்யும் கேரக்டரில் நடிக்கிறார் என்று தான் நினைத்து இருப்பார்கள்.

அப்படி நீங்கள் நினைத்து இருந்தார் அது தான் தவறு. அது குறித்து அனிருத் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியதாவது, இந்த படத்தில் நயன்தாரா போதை மருந்து விற்கும் பெண்ணாக நடிக்கிறாராம். தன்னுடைய வறுமைக்காக போதை பொருள் விற்பனை செய்து வாழ்க்கையை தொடரலாம் என்று முடிவு எடுத்து வாழ்ந்து வரும் ஒரு பெண்ணிற்கு என்ன நடக்கிறது என்பது தான் கதையாம்.

சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு சிங்கிள் என்று எழுதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அந்த வீடியோவில் நயன்தாராவை யோகி பாபு காதலிப்பதாக வெளியாகி உள்ளது.

காதலிக்கும் அனைவரும் தனது காதலியின் பெயரை நெஞ்சில் தான் பச்சைக் குத்தி வைத்திருப்பார்கள். யோகி பாபு இந்த படத்தில் நயன்தாராவின் படத்தை நெஞ்சில் ஒட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலியான நயன்தாராவுக்கு காதல் தூது விடம் யோகி பாபு மீது கோபத்தில் இருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், நயன்தாரா, யோகி பாபு புகைப்படத்தை போட்டு யோகியின் பெயருக்கு பின்னால் கோபமாக இருப்பது போன்று ஸ்மைலிகளை பதிவிட்டியுள்ளார்.