Actor Yogibabu replace of vadivelu – வடிவேல் நடிக்கவிருந்த ஒரு புதிய திரைப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகர் யோகிபாபு நடிக்கவிருக்கிறார்.

வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருப்பதால், யோகிபாபு முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளது. மேலும், சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் அப்படி நடித்த கூர்கா, தர்ம பிரபு என ஏற்கனவே 2 திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில், சோம்பி, காதல் மோதல் 50/50, மண்டேலா ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், வடிவேலு நடிக்காமல் கைவிடப்பட்ட இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் யோகிபாபு நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால்,வடிவேலுவை வைத்து சக்தி சிதம்பரம் இயக்கவிருந்த பேய் மாமா திரைப்படத்தில் யோகிபாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.