தற்பொழுது தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் சந்தானம் சென்ற பிறகு காமெடி நடிகர்களே யாரும் இல்லை என கவலைப்பட்ட நேரத்தில் அந்த கவலையை பூர்த்தி செய்ய வந்தவர் தான் யோகிபாபு. பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் தனது விடாமுயற்சியாலும், நடிப்புத்திறமையாலும் மாபெரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார் யோகிபாபு. இவரது டைமிங் சென்ஸ் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க பாஸ்-  அவர் இல்லாமல் இன்று நான் ஹீரோ இல்லை - நன்றி மறவாத அஜித்

அதிலும் சமீபத்தில் அவர் நடித்த கோலமாவு கோகிலா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல படங்களில் லைனாக கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு புரளி கிளம்பியது. அது என்னவென்றால் யோகிபாபு இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் என்று. இதுகுறித்து விளக்கமளித்த யோகிபாபு, ஹீரோவாக நடிக்க எனக்கு தகுதியில்லை. காமெடியனாக மட்டுமே நடிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  என்ன ஆயிற்று ஹன்சிகாவுக்கு? அதிர்ச்சியில் ரசிகா்கள்

இந்நிலையில் நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் டைரக்ட் செய்யும் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவாக  நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் தான் யோகி ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.