அட்லி இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு சம்பளமாக பெரும்தொகை பேசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சிறு சிறு படங்களில் தலை காட்டி வந்த யோகி பாபு கோலமாவு கோகிலா படத்திற்கு பின் நிறைய படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். சர்கார் படத்தில் கூட அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், விஜயை வைத்து அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இதுவரைக்கும் அவர் வாங்காத சம்பளமாக ரூ.80 லட்சம் பேசப்பட்டுள்ளதாம். ஆனால், அழைக்கும் போதெல்லாம் அவர் வந்து நடித்து கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இப்படத்திற்காக யோகிபாபு நெடு நாட்கள் கால்ஷிட் கொடுப்பார் எனத் தெரிகிறது.